காலி- கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மகப்பேறு வைத்தியசாலை தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை எனவும்,இந்த வருட இறுதிக்குள் அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை பார்வையிட சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, காலி, மஹ்மோதர வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எம்.எஸ்.என். மனதுங்க, வைத்தியசாலை வர்த்தகப் பணிப்பாளர் அனுராதா நந்தசேன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.