தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்துவதற்கான சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டை நோக்கி – அனைத்தும் ஒரே திசையில்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் விநியோகத்திற்காக நீண்டகாலமாக களத்தில் பயன்படுத்தப்படும் சைக்கிள்களுக்கு பதிலாக, முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படும் எனவும், தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடையும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.