Sunday, June 8, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாத சிசு உயிரிழப்பு

தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாத சிசு உயிரிழப்பு

தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் திடீரென நோய்வாய்ப்பட்ட 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

நேற்று முன் தினம் மேற்படி குழந்தைக்கு பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்றட்டுள்ளதுடன், உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னரும் குறித்த குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

பின்னர் குழந்தை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழந்தையின் சடலம் தற்போது, குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர், குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தாக்கம் உள்ளதாக என்பது தொடர்பில், அறிந்துக்கொள்ள முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles