Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

லிந்துலை பம்பரகலை நடு பிரிவைச் சேர்ந்த வீரையா மாரியாய் என்ற 80 வயதானவர் ஒருவரே இவ்வறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த தொழிலாளி ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்காலிகமாக நாள் சம்பளத்திற்கு கொழுந்து பறித்து வேலை செய்து வந்துள்ளார்.

இவர் இன்று (17) காலை தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது அங்கு மரத்திலிருந்த குளவிக்கூடொன்று கலைந்து அவரை கொட்டியுள்ளது.

தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles