Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை

2 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது மகளை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 17 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ எம் ஏ சஹப்தீனினால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியான தமது புதல்வியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக சந்தேக நபரின் மனைவியளித்த முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த வழக்கின் அனைத்து சாட்சியங்களுக்கும் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியதனை தொடர்ந்து கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles