Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் ஹொலிவுட் நடிகர்கள்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் ஹொலிவுட் நடிகர்கள்

60 ஆண்டுகளுக்கு பிறகு ஹொலிவுட் நடிகர்கள் பாரிய பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகி வருகின்றனர்.

திரைப்படங்களின் தயாரிப்பில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதியை அவற்றை விநியோகிக்கும் புதிய தொழில்நுட்ப தயாரிப்பாளர்களுக்குச் செல்வதாக தெரிவித்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹொலிவுட் நடிகர்கள் சம்பளங்களை சமமாகப் பிரிக்க ஒரு அமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹொலிவுட் திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை எதிர்ப்பதாக ஹொலிவுட் நடிகர் சங்கமும் அறிவித்துள்ளது.

அதற்காக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர்கள், நடிகைகள், குரல் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles