Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை - சுகாதார அமைச்சர்

யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை – சுகாதார அமைச்சர்

வயிற்றுவலி காரணமாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மரணித்த 21 வயது பெண்ணின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாகவே, தமது மகள் உயிரிழந்தாக, குறித்த பெண்ணின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles