Monday, January 19, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பி - ஆணிகள் திருடப்பட்டுள்ளனவாம்

புதிய களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பி – ஆணிகள் திருடப்பட்டுள்ளனவாம்

புதிதாக கட்டப்பட்ட ‘கல்யாணி கோல்ட் கேட்’டில் இருந்து 28 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான செப்பு கம்பி மற்றும் ஆணிகள் போதைக்கு அடிமையானவர்களால் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த புதிய களனி பாலம் ஜப்பான் அரசின் கடனுதவியில் கட்டப்பட்டது.

கொங்கிரீட் தூண்களை இரவு நேரத்தில் ரகசியமாக உடைத்து அதில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

புதிய களனி பாலம் தரையிலிருந்து இணைக்கப்பட்ட செப்பு கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் ஆபத்தில் உள்ளதாக தனது தலைமையில் நாடடாளுமன்றத்தில் கூடிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் குழுவில் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி விடயத்துடன் பொறுப்புடைய துறைகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles