நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் Digiicon 2030 வேலைத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.