Tuesday, February 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெனுலா வழியாக மருந்து செலுத்தியதில் நோய் தொற்று: ஒருவர் உயிரிழப்பு

கெனுலா வழியாக மருந்து செலுத்தியதில் நோய் தொற்று: ஒருவர் உயிரிழப்பு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஊழியர் ஒருவர் கெனுலா வழியாக மருந்து செலுத்தியதால் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர் 33 வயதுடையவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவதற்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு கெனுலா மூலம் மருந்து வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் .

எவ்வாறாயினும், இறப்புக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

எனவே, மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு, அஸ்மா போன்ற பல தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த ,நிலையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் முகாமைத்துவ உதவியாளராக இருந்தவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles