Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் உயிரிழப்பு

கண் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் உயிரிழப்பு

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, பாணந்துறை பகுதியை சேர்ந்த, 72 வயதான தாயொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாய் கண் சத்திரசிக்சைக்காக, கடந்த 6ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

எனினும் அவருடன், சத்திரசிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏனைய அனைவரும் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் இந்த விடயம் தொடர்பில், குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த வைத்தியசாலை அதிகாரிகள், குறித்த பெண்ணின் கண் சத்திரசிகிச்சையை உரிய முறையில் முன்னெடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பெண்ணை தொடர்ந்தும் வைத்தியசாலையில், வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கடந்த 10ஆம் திகதி திடீரென நோய் நிலைமைக்கு உள்ளானதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த மரணம், சந்தேகத்திற்கிடமானது என அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.

முன்னதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒருவர் உயிரிழந்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles