புதிய வரிகளை வரி செலுத்துவோர் மீது சுமத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தால் முடிந்தளவு வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 38.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதன்படி, வரி வருமானம் 44.9 வீதத்தாலும், வருமான வரி 53.64 வீதத்தாலும், பொருட்கள் மற்றும் சேவைகள் 65.6 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
எனினும் இறக்குமதிக்கு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடைய வரிகள் இந்த ஆண்டு 12.2 சதவீதம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.