நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, அதற்கென நான்கு விசேட குழுக்களை நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பொலன்னறுவை, மன்னம்பிட்டியவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பஸ்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.