பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 39,000 கிலோகிராம் உழுந்து இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2 கொள்கலன்களில் இந்த உழுந்து கண்டிபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட உழுந்தின் சந்தைப் பெறுமதி 62 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.