திரிபோஷா உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது மாதாந்தம் 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா நிறுவனத்திற்கு மக்காச்சோள பொறுப்புக்கூறல் முறைமையொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், தேவையான அனுமதிகள் கிடைத்தவுடன் அந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தலைவர் வலியுறுத்தினார்.