ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.
2022ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து இற்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு பட்டினியால் அவதிப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ கூறுகையில், 2030ஆம் ஆண்டுக்குள் மக்கள் பட்டினியால் வாடாத உலகத்தை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.