Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024க்கான அஸ்வெசும விண்ணப்பம் எதிர்வரும் ஓகஸ்டில் கோரப்படும்

2024க்கான அஸ்வெசும விண்ணப்பம் எதிர்வரும் ஓகஸ்டில் கோரப்படும்

அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும பயனாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் கோரப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும வேலைத்திட்டத்தில், ஆண்டுதோறும் தகுதியுடையவர்களை உள்வாங்கும் மற்றும் தகுதியற்றவர்களை நீக்கும் செயல்முறையும் அடங்குகின்றது.

சுமார் 1.2 மில்லியன் மக்களை உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைத்து அவர்களை வலுவூட்டும் பணியை ஜனாதிபதி ஒப்படைத்தார்.

இது தொடர்பான 03 வருட திட்டம் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles