Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்எவரஸ்ட் ஹெலிகொப்டர் விபத்தில் அறுவர் பலி

எவரஸ்ட் ஹெலிகொப்டர் விபத்தில் அறுவர் பலி

வெளிநாட்டவர் குழுவுடன் பயணித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, குறித்த ஹெலிகொப்டர் நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் காணாமல் போனதாக கூறப்பட்டது.

குறித்த ஹெலிகொப்டர் மெக்சிகோ பிரஜைகள் குழுவை ஏற்றிக்கொண்டு காத்மண்டு நோக்கி பறந்து கொண்டிருந்த போது இந்த துரதிஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானம் காணாமல் போனதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டன.

விமானத்தின் சிதைவுகள் மற்றும் பயணிகளின் சடலங்கள் அங்கு காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகொப்டர் மரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles