Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களை தாக்கிய எருமை மாடு: ஐவர் காயம்

பாடசாலை மாணவர்களை தாக்கிய எருமை மாடு: ஐவர் காயம்

ஹல்துமுல்ல பத்கொட பகுதியில் இன்று (11) அதிகாலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் எருமை மாடு துரத்தப்பட்டு, ​​காயமடைந்த நிலையில் அவர்கள் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹல்துமுல்ல பிரதேச கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பத்கொட விபுலானந்த தமிழ் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்கொட மன்சந்தியில் இருந்து பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது நபர் ஒருவர் அழைத்துச் சென்ற எருமை மாடு ஒன்று குறித்த மாணவர்களை துரத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles