Tuesday, February 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் மீது முந்தைய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை -சிஐடி

ஜெரொம் மீது முந்தைய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை -சிஐடி

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் இதற்கு முன் எந்தவிதமான குற்றப் பதிவுகளும் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தபெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் போதகர் ஜெரொம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதன்படி, பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி, போதைப்பொருள் குற்றச்சாட்டுகள், பண மோசடி குற்றச்சாட்டுகள், கொலைகள், கொள்ளைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் மீது எந்த ஒரு பிரிவிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles