ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த அனர்த்தங்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் சில பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.