“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பாக மொத்தம் 968,000 முறைப்பாடுகளும் 17,500 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
கடந்த காலத்தில் நாடு, பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்நிலையில் இருந்து நாட்டை மீட்பதில் முக்கிய அங்கமாக வறிய மக்களை பாதுகாக்கும் நோக்கில் “அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் திட்டம் தொடங்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.