வடக்கு அயர்லாந்தில் புதிய உணவகமொன்றை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சங்கள் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததென ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டில் சென்ட் மேரிஸ் அபே(Abbey, St Mary’s) அமைந்திருந்த பகுதியிலேயே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடுகளில் குறைந்தது இரு எச்சங்கள் 11 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியை சேர்ந்தது எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.