ரிதியகம சஃபாரியில் உள்ள விலங்குகள் குறித்து முறையான பதிவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
தேசிய விலங்கியல் துறை அதிகாரிகளை கோபா குழுவில் முன்னிலையான போதே இந்த விடயம் தெரியவந்தது.
அங்கு விலங்குகளை கொல்வது, ஆவணங்கள் தயாரித்து விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள், ரிதியாகம சஃபாரி பூங்காவின் பிரதி பணிப்பாளரின் முறைகேடுகள் போன்றவை இதன்போது ஆராயப்பட்டது.