Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசொகுசு பேருந்து விபத்து: 8 பேர் காயம்

சொகுசு பேருந்து விபத்து: 8 பேர் காயம்

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பகுதியில் சொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் குறித்த பேருந்தில் பயணித்த எட்டுப் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles