கரையோர சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள கடற்கரையை முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சு கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களை கண்டறிந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இது தொடர்பில், அறிக்கைகள் தமக்கு அவசியமில்லை எனவும், தினமும் கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கைகளை முன்வைப்பதை விடுத்து, பணியை மாத்திரமே செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.