Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக மீனவர்கள் 15 பேர் கைது

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles