Monday, July 28, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்நெதர்லாந்து பிரதமர் பதவி விலகினார்

நெதர்லாந்து பிரதமர் பதவி விலகினார்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புலம் பெயர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு வருவோரை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட மோதலினாலேயே நெதர்லாந்து பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சுமார் 47 ஆயிரம் பேர் அடைக்கலம் கேட்டு விண்ணபித்துள்ளனர்.

ஆனால் நடப்பு ஆண்டில் அந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே முடிவு செய்தார்.

இது தொடர்பாக திட்டத்தை அவர் முன்வைத்த போது எதிர்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் ரூடே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

150 உறுப்பினர்களை கொண்ட நெதர்லாந்து பாராளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசாங்கம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles