வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச திரிபோஷ விநியோகம் செய்வதற்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் ட்ரக்டர் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி தேஜா ஜயசேகரவிடம் நாம் வினவிய போது, வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் எரிபொருள் ஒதுக்கீடும் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிட்டார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இவ்வாறான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தேவையான பாரிய வாகனம் இல்லை எனவும், அவ்வாறான நிகழ்விற்கு நிதியளிக்க போதுமான பணம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக இவ்வாறான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாநகர சபை அல்லது உள்ளூராட்சி சபையில் வாகனம் கோருவதைத் தவிர வேறு வழ இல்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறான வேண்டுகோளுக்கு இணங்க வெலிகம உள்ளூராட்சி சபையினால் வழங்கப்பட்ட ட்ரக்டரில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
