இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்றையதினம் தமது மாதாந்த கூட்டத்தை நடத்தியிருந்தது.
இதன்போது நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை 200 அடிப்படை புள்ளிகளால் மேலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துணைநில் வைப்பு வசதி வீதம் 11 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதம் 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சீராக்கலை அடுத்து வர்த்தக வங்கிகளும் தங்களது வட்டிவீதங்களை சீராக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதமும் கொள்கை வட்டிவீதங்கள் குறைக்கப்பட்ட போது வங்கிகள் வட்டிவீதங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடைமுறையாகியிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.