மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்த 19 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா மாநில சட்டத்தரணி பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.