Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறி விலை 70 வீதத்தால் அதிகரிப்பு

மரக்கறி விலை 70 வீதத்தால் அதிகரிப்பு

கனமழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மரக்கறிகளின் விலை கிலோ 300 ரூபாவை தாண்டியுள்ளது.

கெக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே 100 ரூபாவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்தோடு மலையகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் வாழைக்காய், பலாக்காய் போன்ற மரக்கறிகளை பொதுமக்கள் அதிகம் கொள்வனவு செய்வதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் சீரற்ற வானிலை தொடர்வதால் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles