பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைதியை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.