எதிர்காலத்தில் இறக்குமதி தடைகள் நீக்கப்படவுள்ள போதும், வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய அழுத்தம் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது உள்நாட்டு சந்தையில் வெளிநாட்டு நாணயங்களின் திரவத்தன்மை சீராக வளர்ச்சியடைந்து வருகிறது.
பல்வேறு காரணிகள் ஊடாக இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் உட்பாய்ச்சல் அதிகரித்திருப்பதாலும், அது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும்இ எதிர்காலத்தில் வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி தொடர்ந்தும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.
இவ்வாண்டு இறுதியில் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 350 ரூபா வரையில் மீண்டும் அதிகரிக்கலாம் என்று ப்ளும்பேர்க் உள்ளிட்ட சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
எவ்வாறாயினும் அந்தளவுக்கு மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை ரூபாவின் செயற்பாடு வலுவடைந்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.