தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களில், 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 604 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.