Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை துறைமுக அபிவிருத்திக்கு பெல்ஜியத்திடமிருந்து உதவி

இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு பெல்ஜியத்திடமிருந்து உதவி

இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பெல்ஜிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெல்ஜிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனவும் குறித்த தொழில்நுட்பங்களை கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தேவையான ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாகவும் பெல்ஜிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles