அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஔடதங்களும் கைவசமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.
அவசர நிலைமை ஏற்ப்பட்டால் முகங்கொடுக்க தயார் நிலையிலேயே இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் , 350 அத்தியாவசிய ஔடதங்கள் கைவசம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.சுமார் 100 ஔடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எவ்வாறிருப்பினும் ஔடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.