மத்திய மாகாணத்தில் நீண்ட காலம், வழங்கப்படாதுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆவணங்களில் உள்ள பிரச்சினை உள்ளிட்ட காரணிகளினால் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் வழங்கலில் இழுபறி நிலவியது.
இந்தநிலையில், அதற்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் குறிப்பிட்டார்.