Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கைப்பேசி பயன்படுத்த தடை

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கைப்பேசி பயன்படுத்த தடை

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் கவனச்சிதறல் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருத்துவ காரணங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு மாத்திரம் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட எண்மயக்கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles