பம்பலப்பிட்டி – லெயார்ட்ஸ் வீதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு அருகில் காரில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் , நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சட்டத்தரணி கவின் காரில் இருந்தபோது, நபர் ஒருவர் முதலில் காரை அணுகி பணம் கேட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தன்னிடம் பணம் இல்லை என்று சட்டகரணி கவின் கூறியதும், அந்த கொள்ளையர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை நீட்டி, முதலில் காரின் டேஷ்போர்டில் இருந்த 3000 ரூபாயை பலவந்தமாக எடுத்துள்ளார்.
பின்னர் காரில் இருந்த பையை திருட முயன்றுள்ளார் . அப்போது ஏற்பட்ட இழுபறியில் பையில் இருந்த தங்க நகையொன்று வெளியில் வீசப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேகநபர் அதனையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையனை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொள்ளையர் போதைப்பொருள் பாவனையாளராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.