ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பு ஒன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதுடன்,நேற்று (04) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.