ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நாமத்தில் எரிபொருளை விற்பனை செய்யுமாறு சினோபெக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் வர்த்தக நாமத்தை விளம்பரப்படுத்துவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருளை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் இம்மாத இறுதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவித்தார்.