எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை இன்று (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இவற்றின் விலை குறைப்பு மக்கள் உணரும் வகையில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு சதவீதம் இன்று காலை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.