Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும்

குருதி சீராக்கத்திற்கான உபகரண பற்றாக்குறை விரைவில் நிவர்த்திக்கப்படும்

குருதி சீராக்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நாளை அல்லது நாளை மறுதினம் நிவர்த்திக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் தயாசிரி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார்.

குளியாபிட்டி மற்றும் கல்கமுவ உள்ளிட்ட மேலும் சில வைத்தியசாலைகளில் குருதி சீராக்கத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமையினால் பலரும் மரணிக்கின்றனர் என தயாசிரி ஜயசேகர சபையில் குற்றம்சாட்டினார்.

அத்துடன், இதனை நிவர்த்தி செய்வதற்கு விலை மனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இதற்கு சுகாதார அமைச்சின் நிர்வாகமே காரணமாகும்.

பலமாதங்களாக மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கு சுகாதார அமைச்சரால் தீர்வொன்றினை வழங்க முடியுமா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர வினவினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, வைத்தியசாலைகளில் குருதி சீராக்கத்திற்கான மருத்துவ பொருட்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றேன்.

நாளை அல்லது நாளை மறுதினம் உரிய தரப்பினருடன் கலந்துரையாடிதன் பின்னர் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles