கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படாது என்று அரசாங்கம் கூறினாலும்,இந்தக் கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு 97 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்படுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அந்தக் கட்சியின் தலைமை அலுவல கத்தில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.