Thursday, August 7, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் அமைதியான நாடுகளில் இலங்கைக்கு 107 ஆவது இடம்

உலகின் அமைதியான நாடுகளில் இலங்கைக்கு 107 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டுக்கான உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் கடந்த ஆண்டு இதே பட்டியலில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 2.136 சுட்டெணுடன் 107 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் பூகோள சமாதான சுட்டியை தயாரித்துள்ளனர்.

இவ்வருடத்திற்கான குறித்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ள அதே நேரம் ஆப்கானிஸ்தான் இறுதி இடத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகின் முதல் 10 அமைதியான நாடுகள்

ஐஸ்லாந்து

டென்மார்க்

அயர்லாந்து

நியூஸிலாந்து

ஆஸ்திரியா

சிங்கப்பூர்

போர்த்துக்கல்

ஸ்லோவேனியா

ஜப்பான்

சுவிட்சர்லாந்து

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles