இராகலை கீழ் பிரிவிலுள்ள நெடுங்குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரவலில் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீப்பரவலினால் குறித்த வீடுகளிலுள்ள உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பல மணிநேர முயற்சியின் பின்னர் பிரதேச மக்களால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.