Monday, November 18, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை அமைச்சரவைக்கு

விசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை அமைச்சரவைக்கு

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சினால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக விசேட வைத்திய நிபுணர் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles