Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி நிலுவையை செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்

வரி நிலுவையை செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி நிலுவையை வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் செலுத்த தவறினால் அதன் உரிமங்களை இரத்துச் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை 6.2 பில்லியன் ரூபாய் வரியை செலுத்த தவறியுள்ளன.

இந்த நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வாரம் முதல் அமுலாகும் வகையில் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் உரிய வரிகளை வசூலிக்கவில்லை என்ற தொடர்ச்சியான விமர்சனங்களால், மதுவரி திணைக்களம் நாட்டிலுள்ள சிறந்த ஒன்பது மதுபான உற்பத்தியாளர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மொத்த நிலுவைத் தொகையான 6.2 பில்லியன் ரூபாவில், 2.5 பில்லியன் ரூபா வரி நிலுவையாகவும், எஞ்சிய 3.8 பில்லியன் ரூபா தாமதக் கட்டணமாகவும் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles