Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை கட்டடம் மீது விழுந்த பலா மரம் – 8 மாணவர்கள் காயம்

பாடசாலை கட்டடம் மீது விழுந்த பலா மரம் – 8 மாணவர்கள் காயம்

கேகாலை எத்திரியகல கனிஷ்ட பாடசாலை மைதானத்தில் உள்ள பலா மரமொன்று காற்றினால் பாடசாலை கட்டிடம் ஒன்றின் மீது விழுந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வகுப்பறை கட்டிடத்தின் மீது விழுந்த பலா மரம் மேற்கூரையில் இருந்த ஓடுகளை உடைத்து 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தலையில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து காயமடைந்த எட்டு மாணவர்கள் முச்சக்கரவண்டிகள் மூலம் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஏழு மாணவர்களும் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles